வடக்கு கிழக்கில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு அழைப்பு: அணிதிரளவுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளனர்.
இந்த போராட்டம் வலுப்பெற அனைவரும் அணிதிரண்டு ஆதரவு வழங்குமாறு முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச வலிந்து காணாமல், ஆக்கப்பட்டோர் தினம் எதிர்வரும் 30 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுவதுடன், சுமார் 15 ஆண்டுகாளாக இன்னும் இதற்கு ஒரு தீர்வு இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான எதிர்வரும் 30 ஆம் திகதி வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வடக்கில் யாழ்ப்பாணத்திலும், கிழக்கில் திருகோணமலையிலும் காலை 10 மணியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளார்கள்.
இந்த போராட்டம் வலுப்பெற அனைவரும் திரண்டு ஆதரவு வழங்குமாறு முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments:
Post a Comment