உணவு விசமடைந்ததில் 500க்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில்: பக்கமூன பிரதேசத்தில் சம்பவம்
பொலன்னறுவை, பக்கமூன பிரதேசத்தில் உள்ள பிரதான தனியார் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் ஐநூறுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் இன்று (19) காலை உணவு விஷமடைந்ததன் காரணமாக சுகவீனமடைந்த நிலையில் பக்கமூன, அத்தனகடவல பிரதேச வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பக்கமூன பொலிஸார் தெரிவித்தனர்.
நோய்வாய்ப்பட்ட தொழிலாளர்கள், ஆடைத் தொழிற்சாலையில் இருந்து பேருந்துகள் மற்றும் அம்பியூலன்ஸ்கள் மூலம் பக்கமூன பிரதேச வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பக்கமூன பிரதேச வைத்தியசாலையில் இடப்பற்றாக்குறை காரணமாக அதிகளவானோர் பஸ்கள் மற்றும் அம்பியூலன்ஸ்கள் மூலம் அத்தனகடவல பிரதேச வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
அத்தனகடவல மற்றும் பக்கமூன வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட ஆடைத் தொழிலாளர்கள் மற்றும் பணிப்பெண்களின் நிலை கவலைக்கிடமாக இல்லை எனவும் அவர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் பக்கமூன மற்றும் அத்தனகடவல வைத்தியசாலையின் பேச்சாளர் தெரிவித்தார்.
Reviewed by Author
on
September 19, 2024
Rating:


No comments:
Post a Comment