மன்னாரில் புற்று நோயை கண்டறியும் நிலையம் தொடர்பான விழிப்புணர்வு முன்னெடுப்பு.
வருமுன் காப்போம் முழுமையாக குணப்படுத்த ஆரம்ப நிலையில் கண்டறிவோம்! எனும் தொனிப்பொருளில் shanu foundation நிறுவனத்தின் ஏற்பாட்டில் அரசாங்க அதிபர் அவர்களின் தலைமையில் புற்று நோயை கண்டறியும் நிலையம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு நேற்றைய தினம் (17) செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்டது.
முன்கூட்டியே புற்று நோயை கண்டறியும் நிலையம் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் அமைக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியிலும் சரி இலங்கையிலும் சரி இறப்புகளுக்கான காரணமாக இரண்டாவதாக இடம் வகிக்கும் நோயாக புற்று நோய் காணப்படுகிறது.எனவே அதனை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து அதனை தடுப்பதன் மூலம் இறப்புகளை கட்டுப்படுத்த முடியும்.
குறித்த நிலையமானது புற்றுநோய் அறிகுறி எதுவும் ஏற்பட முன்னர் ஒரு சாதாரண நோயாளிக்கு ஒரு சாதாரண மனிதருக்கு புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறதா? எதிர்காலத்தில் புற்றுநோய் ஏற்படக்கூடிய வாய்ப்பு ஏதும் உள்ளதா என்பதை பற்றி கண்டறிவதற்கான அல்லது அவ்வாறான நோயாளிகளுக்கு இது வரைக்கும் ஏதாவது புற்றுநோய் ஏற்பட்டு? உள்ளதா என்பதை பற்றிய பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான ஒரு நிலையமாகும்.
இந்நிலையம் புற்று நோயாளர்களுக்கான நிலையம் அன்றி புற்றுநோய் ஏற்படுவதற்கு முன்பு கூட்டியே அதனை ஏற்படாமல் தடுப்பதற்கு அல்லது அதன் ஆரம்ப நிலையிலேயே அதனை கண்டறிவதற்கான ஒரு நிலையமாக தொழிற்படும் நிலையமானது ஒரு வாரத்தில் 7 நாட்கள் திறந்திருக்கும். காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை யாழ் போதனா வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவில் இயங்கும் பொதுமக்கள் தங்களுடைய புற்றுநோய் சம்பந்தமான சந்தேகங்களை குறித்த சிகிச்சை நிலையத்திற்கு சென்று அறிந்து கொள்ளலாம்.
குறித்த நிகழ்வு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில்,Roll ball association mannar ,Ria money transfer ,Shanu foundation,இணைந்து நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மன்னாரில் விழிப்புனர்வை முன்னெடுத்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் புற்று நோயை கண்டறியும் நிலையம் தொடர்பான விழிப்புணர்வு முன்னெடுப்பு.
Reviewed by Author
on
September 18, 2024
Rating:

No comments:
Post a Comment