பாராளுமன்ற உறுப்பினர் சால்ஸ்நிர்மலநாதனை மரியாதையின் நிமித்தம் சந்தித்த ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க
மன்னார் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகாக வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க மரியாதையின் நிமித்தம் இன்றையதினம் செவ்வாய்கிழமை பாராளுமன்ற உறுப்பினர் சால்ஸ் நிர்மலநாதனை அவரது இல்லத்தில் சந்தித்திருந்தார்
இதன் போது மன்னார் தமிழரசுகட்சியின் கிளை உறுப்பினர்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள்,பொதுமக்கள் இணைந்து ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்கவிற்கு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தியிருந்தனர்
அதே நேரம் தமிழரசு கட்சியின் மன்னார் கிளையின் இளைஞர் அணி மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் வருகை தந்த பொது மக்களுடன் சால்நிரமலாதனின் வீட்டில் கலந்துரையாடல் ஒன்றும் இடம் பெற்றிருந்தது
குறித்த சந்திப்பு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சால்நிர்மலநாதனிடம் வினவிய நிலையில் இது ஒரு மரியாதையின் நிமித்தமான சந்திப்பு எனவும் ஜனாதிபதி தேர்தலில் ஒட்டு மொத்த மன்னார் மக்கள் மற்றும் ஆதரவாளர்களின் முடிவே எனது முடிவு எனவும் மக்கள் யார் பக்கமோ அவர்களின் பக்கமே நான் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் சால்ஸ்நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்
பாராளுமன்ற உறுப்பினர் சால்ஸ்நிர்மலநாதனை மரியாதையின் நிமித்தம் சந்தித்த ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க
Reviewed by Author
on
September 17, 2024
Rating:
No comments:
Post a Comment