தமிழ் பொதுவேட்பாளரின் பிரச்சாரக் கூட்டத்தை கண்காணித்த ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழுவினர்
வவுனியாவில் இடம்பெற்ற தமிழ் பொதுவேட்பாளரின் பிரச்சாரக் கூட்டத்தை கண்காணித்த ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழுவினர்
வவுனியா, குருமன்காடு கலைமகள் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற தமிழ் பொது வேட்பாளர் அரியநேந்திரன் அவர்களின் தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கு ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழுவினர் வருகை தந்து கண்காணித்து இருந்தனர்.
(08. 09) இடம் பெற்ற தேர்தல் பிரச்சார செயற்பாடுகள் மற்றும் கலந்து கொண்ட மக்களுடைய செயல்பாடுகள் தொடர்பிலும் அவதானம் செலுத்தி இருந்தார்கள். அத்துடன், குறித்த கூட்டத்தில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்களுடனும் கலந்துரையாடி கூட்டம் தொடர்பில் தகவல்களைப் பெற்றுக் கொண்டனர்.
அவர்கள் புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டதுடன் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அரசியல்வாதிகளாலும், ஜனாதிபதி வேட்பாளராலும் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் தொடர்பிலும் அவர்கள் குறிப்புக்களை எடுத்துக் கொண்டதையும் அவதானிக்க கூடியதாக இருந்தது.
No comments:
Post a Comment