நெருங்கும் தேர்தல்: யாழ்.வாக்கு எண்ணும் நிலையத்தில் கள ஆய்வு
எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள ஜானாதிபதித் தேர்தலில் யாழ்ப்பாணத்தின் வாக்கெண்ணும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஒழுங்கமைப்புக்கள் தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் கள ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
இக்கள ஆய்வில் மண்டப ஒழுங்குகள், போக்குவரத்து, பொது வசதிகள், நலனோன்பு வசதிகள், மின்சார வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் போன்ற விடயங்கள் ஆய்வு செய்யப்பட்டதுடன் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
இக்கள ஆய்வில் உதவித் தேர்தல்கள் ஆணையாளர் அமல்ராஜ், வடமாகாணப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஏ. ஜே. ஹாலிங்க ஜெயசிங்க, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், பொலிஸ் பொறுப்பதிகாரிகள் மற்றும் உதவி தெரிவாட்சி அலுவலர்கள் என பலர் பங்குபற்றியிருந்தனர்.
Reviewed by Author
on
September 17, 2024
Rating:


No comments:
Post a Comment