அடுத்த ஜனாதிபதி ஆகுவதற்கு தயாராகுகின்றார் அனுர
2024 ஜனாதிபதி தேர்தலில் வௌியான முடிவுகளுக்கு அமைய தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 5,620,098 வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார்.
சஜித் பிரேமதாச 4,347,703 வாக்குகளுடன் இரண்டாவது இடத்திலும், ரணில் விக்கிரமசிங்க 2,292,575 வாக்குகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.
நான்காவது இடத்தில் நாமல் ராஜபக்ஷ 341,986 வாக்குகளுடனும் மற்றும் பா.அரிய நேத்திரன் 226,329 வாக்களுடனும் 5 ஆவது இடத்திலும் உள்ளனர்.
121,969 வாக்குகளை பெற்று திலித் ஜயவீர 6 ஆவது இடத்தை பிடித்துள்ளார்.
இதற்கமைய, வாக்குகள் அடிப்படையில் வெற்றிப் பெற்ற அநுர குமார திஸாநாயக்க 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெறாத காரணத்தினால் தற்போது இரண்டாம் கட்ட விருப்பு வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.
தேர்தல் முடிவுகளின் உத்தியோகபூர்வ முடிவுகளை நீங்கள் இங்கே காணலாம்.
Reviewed by Author
on
September 22, 2024
Rating:


No comments:
Post a Comment