அண்மைய செய்திகள்

recent
-

அனுரவின் ஆட்சியில் அடுத்து ஒரு பெண் பிரதமர் ஆகலாம்

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவார் என நம்பப்படும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்கவின் பதவிப் பிரமாணம் குறித்து தேசிய மக்கள் சக்தி இறுதித் தீர்மானத்தை எடுத்துள்ளது.

இதேவேளை, தான் ஜனாதிபதியானால் அடுத்து என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்ற விடயத்தை ஏற்கனவே அநுர அறிவித்திருந்தார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது. 

அதன்படி உடனடியாக அவர் நாடாளுமன்றத்தை கலைக்கலாம். இரண்டாவதாக அவர் கூறிய விடயம் பெண் ஒருவரே பிரதமர் என்பதாகும். அந்த வாய்ப்பு கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கே கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அவ்வாறு நடந்தால் சிறிமாவோ பண்டாரநாயக்கவுக்குப் பிறகு இலங்கையின் பெண் பிரதமர் என்ற பெருமையை ஹரிணி அமரசூரிய பெறுவார். 

தற்போது தேசிய மக்கள் சக்திக்கு நாடாளுமன்றில் அநுரவோடு சேர்த்து மூன்று பேர் உள்ளனர். அநுர ஜனாதிபதியாக பதவியேற்கும் பட்சத்தில் அவரது இடத்துக்கு தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளராக உள்ள லஷ்மண் நிபுண ஆராய்ச்சி நியமிக்கப்படலாம். 

ஆனால், நாடாளுமன்றத்தை கலைத்த பிறகு அவரை நியமிக்க முடியாது. எனவே அவர் அநுரவின் இடத்துக்கு நியமிக்கப்பட்ட பிறகு நாடாளுமன்றம் கலைக்கப்படலாம். ஆகவே, ஒரு வாரம் வரை சில நேரங்களில் அவகாசங்கள் இருக்கும். 

அப்படியானால் பாராளுமன்றத் தேர்தல்கள் வரை அமையப்போகும் காபந்து அரசாங்கம்? அமைச்சரவைக்கு ஜனாதிபதியே தலைவர். 

ஆகவே, ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அமைச்சரவை தானாகவே கலையும். அநுரவுக்கு அந்த பொறுப்பு வரும்.

தன்னோடு சேர்த்து மூவர் கொண்ட காபந்து அரசாங்கத்தை அநுர அமைக்க முடியும். பிரதான பொறுப்புகளை தான் வகிக்கலாம். பிரதமருக்கு சில பொறுப்புகளையும் ஏனைய இருவருக்கும் அவற்றை வழங்கலாம். 

எனினும் இதற்கு ஆதரவளிக்க அநுர குமார திசாநாயக்க ஏனைய கட்சிகளுக்கு அழைப்பு விடுப்பாரா என்பது சந்தேகமே?

அவர்களது கட்சி கொள்கைகள் அதற்கு சாதகமாக இல்லை என்பதையும் அவர் நன்கு அறிவார். அப்படி நடந்தால் அது கட்சியின் கொள்கையை பிரதிபலிப்பதாகவே அமையும்.

ஏனென்றால் தலைவர் எடுக்கும் முடிவுக்கு உடன்படும் கட்சியல்ல தேசிய மக்கள் சக்தி. கட்சி எடுக்கும் தீர்மானங்களுக்கு உடன்படும் தலைவராகவே அநுர இங்கு செயற்பட வேண்டியவராக இருக்கின்றார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.





அனுரவின் ஆட்சியில் அடுத்து ஒரு பெண் பிரதமர் ஆகலாம் Reviewed by Author on September 22, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.