அண்மைய செய்திகள்

recent
-

அடி காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட நபரால் பரபரப்பு

யாழ்ப்பாணம் (Jaffna) ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்லைப்பிட்டி பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


இதன்போது அல்லைப்பிட்டி 3ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த கஜேந்திரன் (வயது 43) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில், குறித்த பகுதியின் புதிதாக கட்டுமானம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறு நிர்மாணிக்கப்படும் கட்டுமானத்திற்கு அருகாமையில் சடலமானது மீட்கப்பட்டுள்ளது

மேலதிக விசாரணை

சடலமாக மீட்கப்பட்டவரின் உடலில் அடி காயங்கள் காணப்படுவதோடு, கட்டுமானத்தில் இரத்த கறைகளும் காணப்பட்டுள்ளன.

இந்நிலையில் இவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.




குறித்த பகுதிக்கு விரைந்த தடயவியல் பொலிஸார் தடயங்களை சேகரித்துள்ளதுடன் மீட்கப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.






அடி காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட நபரால் பரபரப்பு Reviewed by Author on September 09, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.