முதல்சுற்றிலேயே ரணில் வெற்றிபெறுவார்!! மஸ்தான் ஆருடம்!
முதல்சுற்றிலேயே ரணில் விக்கிரமசிங்க வெற்றிபெறுவார் என்று இராஜாங்க அமைச்சர் காதர்மஸ்தான் தெரிவித்தார்.
ஜனாதிபதித்தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்றுவருகின்றது.
அந்தவகையில் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் வவுனியா தமிழ்மத்திய மகாவித்தியாலத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கெடுப்பு நிலையத்தில் தனது வாக்கினை முதலாவது நபராக பதிவுசெய்திருந்தார்.
அதன்பின்னர் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்…..
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் முதல்சுற்றிலேயே அதிகளவான வாக்குகளை பெற்று வெற்றிபெறுவார். அதன் மூலம் நாடும் மக்களும் வளம்பெறும் விதத்தில் அவரதுஆட்சிமுறை அமையும்.
நாட்டுமக்கள் மாத்திரம் அல்லாமல் வன்னியின் மூன்று மாவட்ட மக்களும் அதிகூடிய வாக்குகளை அவருக்கு வழங்குவார்கள் என்பதில் மாற்றுக்கருத்துக்கள் இல்லை என்றார்.
No comments:
Post a Comment