காலை 10.00 மணி வரை முல்லைத்தீவில் 28.61% வாக்குகள் பதிவாகியுள்ளது
காலை 10.00 மணி வரை முல்லைத்தீவில் 28.61% வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தெரிவித்தார்
தேர்தல் கள நிலவரம் தொடர்பில் சற்று முன்னர் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலோயே அவர் இவ்வாறு தெரிவித்தார்
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்
வன்னி தேர்தல் தொகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்திற்குரிய ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு நடவடிக்கைகள் காலை 7 மணிக்கு 137 வாக்களிப்பு நிலையங்களிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது மக்கள் ஆர்வமாக வாக்களித்தவாறு இருக்கிறார்கள்
இன்று காலை 10.00 மணி வரைக்கும் 28.61% வாக்குகள் பதிவாகி உள்ளது
முல்லைத்தீவு மாவட்டத்தில் 86889 வாக்காளர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளார்கள் இன்று காலை 10 மணி வரை 24859 பேர் வாக்களித்துள்ளார்கள் அதேபோல் முல்லைத்தீவு மாவட்டத்திலே 3566 பேர் தபால் மூல வாக்களிப்புக்கு தகுதிபெற்றுள்ளார்கள் 3515 பேர் வாக்களித்துள்ளார்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் சுமுகமாகவும் அமைதியாகவும் நடைபெற்று வருகிறது
காலை 10.00 மணி வரை முல்லைத்தீவில் 28.61% வாக்குகள் பதிவாகியுள்ளது
Reviewed by Author
on
September 21, 2024
Rating:
Reviewed by Author
on
September 21, 2024
Rating:


No comments:
Post a Comment