அண்மைய செய்திகள்

recent
-

தமிழர்களின் வாக்குகளை பிரித்து ஏனைய சமுதாயத்தினர் வெற்றி பெறுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர் அ.றொஜன்

 தமிழர்களின் வாக்குகளை பிரித்து ஏனைய சமுதாயத்தினர் வெற்றி பெறுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழர்களுக்கு என எக் கட்சியும் ஒன்று பட்டு இருக்க கூடாது என்பதில் தெளிவாக உள்ளனர்.எல்லா பக்கத்திலும் பணம் பரிமாறப்படுகின்றது. எனவே மக்கள் சரியான முறையில் வாக்களிக்க வேண்டும்  என  ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர் அ.றொஜன் தெரிவித்துள்ளார்.


மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை(11) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.


அவர் மேலும் தெரிவிக்கையில்,,


-தென்னிலங்கையில் ஏற்பட்ட மாற்றத்தை போன்ற எமது பகுதியிலும் மக்கள் மாற்றத்தை ஏற்படுத்த எதிர்பார்த்துள்ளனர்.இம்முறை பாராளுமன்ற தேர்தலில் மக்கள் எதிர்பார்த்த படி இளையோர் சார்பாக நான் போட்டியிடுகின்றேன்.


எனினும் இம்முறை அதிக அளவில் பணம் செலவிடப்படுகிறது.குறித்த பணம் உரிய வகையில் செலவிடப் படுமாக இருந்தால் ஒரு சில மாதங்களில் வன்னி மாவட்டம் குட்டி சிங்கப்பூராக மாறும்.அதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளன.ஏன் என்று எனக்கு தெரியவில்லை.முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தாலும் சரி புதிதாக போட்டியிடுகின்ற வர்களும் சரி மக்களிடத்தில் பணத்தை வழங்குவதிலும்,அதனூடாக வாக்குகளை பெற்றுக் கொள்வதில் அக்கறையாக இருக்கிறார்கள்.


கடந்த ஒரு மாதத்திற்குள் லேயே மக்கள் மத்தியில் சென்று அவர்களை சந்திக்க கூடியவர்கள் தேர்தல் முடிவடைந்த பின்னர் குறித்த சந்தர்ப்பத்தை மக்களுக்கு வழங்குவது இல்லை.


தமிழர்களின் வாக்குகளை சிதறடித்து தமிழர்களுக்கு உரிமை இல்லை என்பதை காண்பிப்பதற்கு பல கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள் வன்னியில் போட்டியிடுகின்றனர்.


சுயேட்சை குழுக்களின் போட்டி போடுகின்றவர்களின் தலைமைத்துவங்கள் அனைத்தும் வெளிநாடுகளில் தொடர்பு பட்டதாகவும், வெளிநாடுகளில் இருந்து நிதி அனுப்புகின்ற வர்களாகவும் காணப்படுகின்றனர்.


தமிழர்களின் வாக்குகளை சிதறடித்து ஏனைய சமுதாயத்தினர் வெற்றி பெறுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்கவே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


தமிழர்களுக்கு என எக் கட்சியும் ஒன்று பட்டு இருக்க கூடாது என்பதில் தெளிவாக உள்ளனர்.எல்லா பக்கத்திலும் பணம் பரிமாறப்படுகின்றது. எனவே மக்கள் சரியான முறையில் வாக்களிக்க வேண்டும்.


ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமே ஐந்து காட்சிகளை இணைத்து ஒரு கூட்டு அமைப்பாக காணப்படுகின்றது.எனவே தமிழ் மக்கள் இக் கூட்டுக் கட்சியுடன் பயணிக்க வேண்டும்.


தமிழர்களாகிய நாங்கள் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும்.எதிர் காலத்தில் தமிழர்களுக்காக நாங்கள் பயணிக்க வேண்டுமாக இருந்தால் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பை நீங்கள் ஆதரித்து சிறந்த தீர்வை பெற்றுத் தர வேண்டும்.என அவர் மேலும் தெரிவித்தார்.



தமிழர்களின் வாக்குகளை பிரித்து ஏனைய சமுதாயத்தினர் வெற்றி பெறுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர் அ.றொஜன் Reviewed by Author on November 11, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.