வடக்கு கிழக்கில் 10 ஆசனங்களை சங்கு கைப்பற்றும்
பாராளுமன்ற தேர்தலில் சங்கு இம்முறை 10 ஆசனங்களுக்கு மேல் பெற்று வெற்றி பெறும் என முன்னால் பாராளுமன்ற உறுப்பினரும் ரெலோ கட்சியின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்
இன்றையதினம் நண்பகல் விடத்தல் தீவு மன்/புனித ஜோசவாஸ் மகா வித்தியாலயத்தில் தனது வாக்குகளை பதிவு செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெருவிக்கும் போத்கே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்
அவர் மேலும் தெரிவிக்கையில்
சங்கு இம்முறை பெரியதொரு வெற்றியை பெரும் என்ற நம்பிக்கை கிடைத்திருக்கின்றது வடக்கு கிழக்கிலே பெரிதாக ஊதுகின்ற சத்தமாக சங்கின் வெற்றி அமையும் கிட்டத்தட்ட பத்து ஆசனங்களுக்கு மேலே வடக்கு கிழக்கிலே சங்கு பெறும்
இம்முறை அரசாங்கத்தை அமைக்கின்ற வழுவை நாங்கள் பெறுவோம் மக்கள் அந்த ஆணையை வழங்குவார்கள் அப்போது இந்த புது அரசாங்கத்தை வல்லமையோடு ஆதரிக்கின்ற ஒரு முடிவோடு இன பிரச்சினையையும் பொருளாதார பிரச்சினையையும் இணைத்து கொண்டு போகின்ற நிலைப்பாட்டிலே செயற்படுவோம்
ஆகவே இந்த அரசாங்கத்தை நிபந்தனையுடன் நடத்துவதற்கான வாய்ப்பை மக்கள் வழங்குவார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்
No comments:
Post a Comment