முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைதியான முறையில் வாக்களிப்புகள் இடம்பெற்று வருகிறது
இலங்கையின் பாராளுமன்ற தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி ஆகிய நிலையில் இன்றைய தினம் வியாழக்கிழமை (14) காலை 7 மணி முதல் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆரம்பமாகி சுமுகமான முறையில் வாக்களிப்புகள் இடம்பெற்று வருகின்றது.
வன்னி தேர்தல் மாவட்டத்தில் முல்லைத்தீவு தேர்தல் தொகுதியில் 137 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்புகள் இடம்பெற்று வருகின்றது.
காலையில் சற்று மந்த கதியில் வாக்களிப்புகள் இடம் பெற்றாலும் பின்னர் மக்கள் வருகை தந்து வாக்களிப்பதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது
முல்லைத்தீவு மாவட்டத்தில் 86 ஆயிரத்து 889வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில் அதிகமான மக்கள் ஆர்வமாக வாக்களித்து வருவதை அவதானிக்க கூடியதாக உள்ளது.
இதேவேளை நடைபெறுகின்ற பாராளுமன்ற தேர்தலில் இலங்கைத் தமிழரசு கட்சியின் சார்பிலே போட்டியிடுகின்ற வேட்பாளர் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்கள் கள்ளப்பாடு வடக்கு கிராம அலுவலர் அலுவலகத்தில் அமைய பெற்றிருக்கின்ற வாக்களிப்பு நிலையத்தில் தனது வாக்கினை பதிவு செய்தார்

No comments:
Post a Comment