மன்னாரில் அமைதியான முறையில் வாக்களிப்புகள் ஆரம்பம்
இலங்கையின் 17 வது பாராளுமன்ற தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி ஆகிய நிலையில் இன்றைய தினம் வியாழக்கிழமை (14) காலை 7 மணி முதல் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்புகள் இடம் பெற்று வருகின்றது.
வன்னி மாவட்டம் மன்னார் தேர்தல் தொகுதியில் 98 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்புகள் இடம் பெற்று வருகின்றது.
காலையில் சற்று மந்த கதியில் வாக்களிப்புகள் இடம் பெற்றாலும் பின்னர் மக்கள் வருகை தந்து வாக்களிப்பதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
மன்னார் மாவட்டத்தில் 90 ஆயிரத்து 607 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில் கடந்த ஜனாதிபதி தேர்தலை பார்கிலும் காலை நிலவரபடி அதிகமான மக்கள் ஆர்வமாக வாக்களித்து வருவதை அவதானிக்க கூடியதாக உள்ளது.
Reviewed by Author
on
November 14, 2024
Rating:









No comments:
Post a Comment