அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் NPP அமைப்பாளர் என அடையாளப் படுத்திய நபர் அடாவடித்தனம்-சில வர்த்தகர்களையும் அச்சுறுத்தியதாக குற்றச்சாட்டு

 மன்னார் நகரசபைக்கு சொந்தமான வீதியில் நடைபாதை நாள் சந்தை அடிப்படையில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வியாபாரிகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் உள் நுழைந்து அடாவடி தனத்தில் ஈடுபட்டதுடன் வியாபாரிகளை அச்சுறுத்தியதாக NPP யின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் என தன்னை அறிமுகப்படுத்திய நபர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.


மன்னார் நகர சபையினால் ஆண்டு தோரும் பண்டிகை கால வியாபார நடவடிக்கைக்கு என உள்ளூர் மற்றும் வெளியூர் பகுதிகளை சேர்ந்த வியாபாரிகளுக்கு குத்தகை அடிப்படையில் கடைகள் வாடகைக்கு விடப்படுவது வழமை.அந்த வகையில் இம்முறை கடைகளை குத்தகைக்கு விடுவதற்கான ஏற்பாடுகளை மன்னார் நகரசபை மேற்கொண்டு வருகின்றது.


இதன் போது குத்தகைக்கு விடப்படும் பகுதியில் இருந்த பெரும்பாலான நடைபாதை வியாபாரிகள் அப்பகுதியில் இருந்து தாமாக நகரசபையின் கோரிக்கைக்கு அமைவாக வெளியேறியிருந்தனர். இருப்பினும் சிலர் அப்பகுதியை விட்டு வெளியேற மறுத்து இன்றைய தினம்(16) பொலிஸார் மற்றும்  நகரசபை ஊழியர் களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனர்.


இந்நிலையில் அப்பகுதிக்கு வருகை தந்த தேசிய மக்கள் சக்தியின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் என தன்னை அடையாளப்படுத்திய நபர் அதிகாரிகளுடன் விதண்டா வாதத்தில் ஈடுபட்டதுடன் அப்பகுதியில் இருந்த சில வியாபாரிகளுடன் முரண்பாட்டிலும் ஈடுபட்டார்.


 அதே நேரம்  அங்கே கதைத்த விடையங்களை ஒளிப்பதிவு செய்வதை தடுக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டதுடன் காணொளி எடுக்க முயன்ற ஊடகவியலாளரின் தொலை பேசியையும் குறித்த நபர் தட்டி விட முயற்சி செய்தார்.


அதே நேரம் குறித்த பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த கடைகளை அகற்ற முடியாது எனவும் தான் அமைச்சர் மற்றும் ஆளுநரிடம் பேசி விட்டதாகவும் கடிதம் மாலை வரும் எனவும் தெரிவித்திருந்தார் .


இருந்த போதிலும் ஆளுநர் அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு வினவிய போது அவ்வாறு எந்த ஒரு அனுமதியும் வழங்கப்படவில்லை எனவும் எந்த ஒரு கட்சியின் அரசியல் வாதிகளும் ஆளுநரிடம் இது தொடர்பில் கதைக்கவும் இல்லை என தெரிவித்திருந்தனர்.


மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் என தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு சிலர் இவ்வாறு செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதுடன் இவ்வாறான பொய்யான விடயங்களை தெரிவித்து அடாவடித் தனத்தில் ஈடுபட்ட  நபர் உடனடியாக விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என பாதிக்கப்பட்ட வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.











மன்னாரில் NPP அமைப்பாளர் என அடையாளப் படுத்திய நபர் அடாவடித்தனம்-சில வர்த்தகர்களையும் அச்சுறுத்தியதாக குற்றச்சாட்டு Reviewed by Author on December 16, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.