தலைமன்னார் பங்கில் முதல் முறையாக சிறப்பாக இடம்பெற்ற மாபெரும் கரோல் குழுப்பாடல் போட்டி
தலைமன்னார் பங்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை வலயங்களுக்கிடையிலான குழு கரோல் பாடல் போட்டி நடைபெரும் என பங்குத்தந்தை எ.டெனி கலிஸ்ரஸ் அவர்கள் அறிவித்தல் வழங்கியிருந்தார்.
அதற்கு அமைவாக தலைமன்னார் கிராமத்தில் (ஊர்மனை) இருந்து 07 வலயங்களும், தலைமன்னார் பியர் கிராமத்தில் இருந்து 03 வலயங்களும், தலைமன்னார் ஸ்ரேசன் கிராமத்திலிருந்து 01 வலயமுமாக 11 வலயங்கள் இப்போட்டியில் பங்கு கொண்டனர்.
இப்போட்டிக்கான நடுவர்களாக அருட்பணி.றொபேட் (இயேசு சபை-அடம்பன்)அருட்பணி.டிசாந்தன் (உதவி பங்குத்தந்தை வங்காலை)இ திருமதி.சு.டெனிஸ்ரீன் (அபிவிருத்தி உத்தியோகத்தர்) ஆகியோர் கடமையாற்றிய மை குறிப்பிடத்தக்கது.
இப்போட்டியில் அனைத்து வலயங்களும் உற்சாகமாக பங்கு கொண்டமை குறிப்பிடத்தக்கது. இப் போட்டிக்கான முடிவுகள் கிறிஸ்து பிறப்பு நள்ளிரவுத் திருப்பலி முடிவில் அறிவிக்கப்படும் என பங்குத்தந்தை தெரிவித்தார்.

No comments:
Post a Comment