ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக சதமடித்த தமிழ் இளைஞன்
சார்ஜாவில்இடம்பெற்றுவரும் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய கிண்ணப்போட்டியில் இலங்கை அணி வீரர் சாருஜன் சண்முகநாதன் (sharujanshanmuganathan) சதமடித்துள்ளார்.
19 வயதிற்கு கீழ் பட்டோருக்கான 50 ஓவர்கள் கொண்ட ஆசிய கிண்ண தொடர் போட்டி ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வருகின்றது.
இன்றையதினம், ஆப்கானிஸ்தான் (Afghanistan) மற்றும் இலங்கை அணிக்கெதிரான போட்டி ஆரம்பமாகியது.
சாதிக்கும் சாருஜன்
இந்த போட்டியில் இரண்டாவது ஓவரில் களமிறங்கிய சாருஜன் 131 பந்துகளில் 102 ஓட்டங்களை பெற்று 50 ஆவது ஓவரில் ஆட்டமிழந்துள்ளார்.
நேபாள அணிக்கு எதிராக கடந்த 29ஆம் திகதி நடைபெற்ற போட்டியில் சாருஜன் அரைசதம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக சதமடித்த தமிழ் இளைஞன்
Reviewed by Author
on
December 01, 2024
Rating:

No comments:
Post a Comment