அண்மைய செய்திகள்

recent
-

கிளிநொச்சியில் சுயாதீன ஊடகவியலாளரை கடத்த வந்த இருவர் இன்னும் கைதாகவில்லை

 போரினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மண்ணின் சுயாதீன ஊடகவியலாளரைக் கடத்த முயன்றனர் எனச் சந்தேகிக்கப்படும் இருவரைப் பொலிஸார் இன்னமும் கைது செய்யவில்லை.


தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் கிளிநொச்சி அலுவலகத்தில் பணிபுரியும் முருகையா தமிழ்ச்செல்வன் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை மாலை தனது கடமையை முடித்து வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, கறுப்பு நிற வாகனத்தில் வந்த இருவர் அவரைக் கடத்திச் செல்ல முற்பட்டதுடன் முயற்சி தோல்வியடைந்ததையடுத்து அவரைத் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.


அவர்களில் ஒருவரின் விவரங்கள் பொலிஸாரிடம் இருப்பதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.


கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் தம்மைக் கடத்த வந்த வாகனத்தை ஓட்டிச் சென்றவர் கிளிநொச்சி, பாரதிபுரத்தைச் சேர்ந்தவர் என நேற்றுமுன்தினம் மாலை அங்கு வந்த பொலிஸ் அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்ததாக, தாக்குதலுக்குள்ளான கிளிநொச்சி ஊடக அமையத்தின் செயலாளர் முருகையா தமிழ்ச்செல்வன் குறிப்பிட்டுள்ளார்.


தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் கிளிநொச்சி அலுவலகத்திற்கு நேற்றுமுன்தினம் காலை வந்த மேற்படி நபர் தன்னையும், அலுவலகத்தில் உள்ள உயர் அதிகாரி ஒருவரையும் திட்டியதாக முருகையா தமிழ்ச்செல்வன் சக ஊடகவியலாளர்களிடம் கூறியுள்ளார்.


சக ஊடகவியலாளரை கடத்த முயன்ற இருவரையும் நேற்று மாலைக்குப்  பின்னரும் பொலிஸார் கைது செய்யத் தவறியுள்ளனர் என்று பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.


பல தமிழ் ஊடக நிறுவனங்களில் சுயாதீன ஊடகவியலாளர்களாகப்  பணிபுரியும் முருகையா தமிழ்ச்செல்வன் கிளிநொச்சி பிரதேசத்தில் இடம்பெறும் சட்டவிரோத போதைப்பொருள், மண், மணல் கடத்தல் தொடர்பான செய்திகளை வெளியிட்டு வந்துள்ளார்.


மேலும் முருகையா தமிழ்ச்செல்வன் தொடர்ந்தும் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.




கிளிநொச்சியில் சுயாதீன ஊடகவியலாளரை கடத்த வந்த இருவர் இன்னும் கைதாகவில்லை Reviewed by Author on December 28, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.