பிரான்சில் இலங்கைத் தமிழர் ஒருவர் எடுத்த தவறான முடிவு - தவிக்கும் குடும்பத்தினர்
பிரான்ஸில் புலம்பெயர் யாழ்ப்பாண தமிழர் ஒருவர் ரயிலில் பாய்ந்து உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
பிரான்ஸ் -லாச்சப்பல் பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் இருபிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
யாழ்ப்பாணம் தீவு பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர், குடும்பத்துடன் பிரான்சில் வாழ்ந்து வருகின்றார்.
இந்நிலையில் கடந்த வெள்ளியன்று (20) குடும்பஸ்தர் அதிவேகமாக செல்லும் ரயிலில் பாய்ந்து உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் அவரது விபரீத முடிவுக்கான காரணம் வெளியாகாத நிலையில், இச்சம்பவம் பிரான்ஸ் வாழ் தமிழர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்சில் இலங்கைத் தமிழர் ஒருவர் எடுத்த தவறான முடிவு - தவிக்கும் குடும்பத்தினர்
Reviewed by Author
on
December 23, 2024
Rating:

No comments:
Post a Comment