மன்னார் பொது வைத்தியசாலையில் இறந்த தாயின் மரண விசாரணை
மன்னார் பொது வைத்தியசாலையில் மகப்பேற்று சிகிச்சையின் போது மரணமடைந்த தாய் மற்றும் சிசுவின் மரணம் தொடர்பிலான வழக்கு விசாரணை நேற்றைய தினம் திங்கட்கிழமை மன்னார் நீதவான் நீதி மன்றத்தில் மரண விசாரணைகளுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது
இதன் போது இறந்த பெண்ணின் கணவரிடம் மரணம் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டதுடன் அவருடைய சாட்சியம் பதிவு செய்யப்பட்டு அவற்றை நெறிப்படுத்தப்பட்டது.
அதே நேரம் சம்பவத்தின் போது கடமையில் இருந்த இரு தாதிய உத்தியோகத்தர்களையும் விசாரித்து அவர்களின் சாட்சியங்களையும் நெறிப்படுத்துமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
அதே நேரம் இறந்த பெண்ணின் உடல்கூற்றுபரிசோதனை அறிக்கை இதுவரை கிடைக்க பெறாமையினால் குறித்த அறிக்கையை விரைந்து பெறுவதற்கான நினைவூட்டல் கடிதத்தை அனுப்பி உடல்கூற்றுபரிசோதனை அறிக்கையை பெற்று கொள்ளுமாறு மரணித் தாயின் சார்பாக ஆஜரான சட்டத்தரணி செல்வராஜ் டினேசன் அவர்கள் கோரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில் குறித்த வழக்கு விசாரணை மேலதிக நடவடிக்கைகளுக்காக ஜனவரிமாதம் 20ம் திகதி தவணையிடப்பட்டுள்ளது.
Reviewed by Author
on
December 17, 2024
Rating:
.jpg)

No comments:
Post a Comment