அண்மைய செய்திகள்

recent
-

இரண்டாவது நாளாக தொடரும் யாழ். பல்கலை மாணவர்களின் உணவு தவிர்ப்பு போராட்டம்

 யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் 09 பேருக்கு விதிக்கப்பட்டுள்ள வகுப்புத்தடைகளை நீக்க வேண்டும் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன் வைத்து மாணவ ஒன்றிய பிரதிநிதிகள் முன்னெடுத்த உணவு தவிர்ப்பு போராட்டம் இரண்டாவது நாளாகவும் தொடருகின்றது.


பல்கலைக்கழக முன்றலில் நேற்றைய தினம் மாணவ ஒன்றிய பிரதிநிதிகள் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.


கடந்த மே மாதம் விஞ்ஞான பீட மாணவர்களின் கற்றல் மண்டபத்தில் மாணவர்கள் கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளை, மாணவர்களை மண்டபத்தினுள் வைத்து விரிவுரையாளர் ஒருவர் பூட்டிய வேளை விஞ்ஞான பீட மாணவர் ஒன்றிய தலைவர் மண்டப கதவினை திறந்து மாணவர்களை வெளியேற்றி இருந்துள்ளார்.


கதவினை பூட்டை உடைத்தே திறந்ததாக குற்றம் சாட்டி அவர்களுக்கு வகுப்பு தடை விதிக்கப்பட்டது.


அதுபோன்று பல்கலைக்கழத்தினுள் இருந்த ஐந்து கல்லாசனங்களை உடைத்து எறிந்தமை தொடர்பில் கலைப்பீட பீடாதிபதியிடம் கேள்வி எழுப்பிய மாணவர்கள் ஐவருக்கும் வகுப்பு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.




இரண்டாவது நாளாக தொடரும் யாழ். பல்கலை மாணவர்களின் உணவு தவிர்ப்பு போராட்டம் Reviewed by Author on January 25, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.