இலங்கையர்கள் 68 பேர் இன்டர்போலின் சிவப்பு பட்டியலில்
வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள 68 திட்டமிட்ட குற்றவாளிகளைக் கைது செய்ய சிவப்பு அறிவிப்புகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.
இந்த சிவப்பு அறிவிப்புகளின்படி வெளிநாடுகளில் கைதுகள் நடைபெற்று வருவதாகவும், நேற்று முன்தினம் துபாயில் மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்
இந்த மூன்று நபர்களும் இந்த வாரம் இந்நாட்டிற்கு அழைத்து வரப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும், வெளிநாடுகளுக்குச் சென்ற குற்றவாளிகள் இந்நாட்டிற்கு அழைத்து வரப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.
இலங்கையர்கள் 68 பேர் இன்டர்போலின் சிவப்பு பட்டியலில்
Reviewed by Author
on
February 04, 2025
Rating:

No comments:
Post a Comment