அண்மைய செய்திகள்

recent
-

பிரான்ஸ் மருத்துவதுறையில் புலம்பெயர் ஈழத்தமிழ் மகன் சாதனை!

 பிரான்ஸில் புலம்பெயர் ஈழத்தமிழ் இளையதலைமுறை பல்வேறு துறைகளிலும் சாதனை புரிந்து வரும் நிலையில், மருத்துவத்துறையில் புதிய கருவியொன்றினை உருவாக்கி தேசிய மட்டத்தில் கவனத்தை சுஜீவன் முருகானந்தம் எனும் உயர்நிலை மாணவர் பெற்றுள்ளார்.


மன இறுக்க உளப் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ள 4-12 வயதுக்குட்பட்ட இளம் சிறார்களின் அக-மன நிலையினை உணர்ந்தறியும் வகையில், நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கைவளையல் கருவியொன்றினை உருவாக்கியுள்ளார்.



உலகத் தமிழர்கள் அனைவரும் வாக்களிப்போம்  

இக்கருவியூடாக அச்சிறார்களுக்கு ஏற்படுகின்ற மன இறுக்க உளப் பாதிப்புக்களை, உடனடியாகவே கைபேசி வழியாக எச்சரிக்கும் திறன் கொண்டதோடு, ஏற்படுகின்ற பாதிப்புக்களை முறையாக ஆவணப்படுத்தும் திறன்கொண்டாதகவும் இக்கருவி உருவாக்கம் பெற்றுள்ளது.



நாடளாவியரீதியில் இத்துறைசார்ந்து 81 பேர் இதனை உருவாக்கியிருந்த நிலையில், இவர்களில் 6 பேர் தேசிய அளவிலான இறுதித்தேர்வுக்கு சென்றுள்ளனர்.



ஒவ்வொருவரது உருவாக்க கருவியின் பயன்பாடு அதன் அவசியம் குறித்தான ஆய்வுகளின் அடிப்படையில் மூன்று கட்டங்களாக இறுதிச்சுற்றில் கருவி தேர்வு செய்யப்படவுள்ளது.


இதில் மூன்றாம் நிலையாக பொதுமக்களும் தங்களுக்கு தேவையான கருவியினை தேர்வு செய்ய முடியும். அந்தவகையில் இவர்களில் ஒருவராக சுஜீவன் முருகானந்தம் அவர்கள் "cœur léger " எனும் பெயரில் தனது கருவியை உருவாக்கியுள்ளார்.












மின்னஞ்சல் பதிவுடன் சுஜீவன் முருகானந்தம் அவர்கள் உருவாக்கியுள்ள " cœur léger" எனும் கருவினை தேர்வு செய்யும்பட்சத்தில் ஈழத்தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் வெற்றியாளராக தேர்வு செய்யப்படுவார்.


அதேவேளை பிரான்ஸ் தமிழர்கள் மட்டுமல்ல உலகத் தமிழர்கள் அனைவரும் இதில் பங்கெடுத்து வாக்களிக்க முடியும் என்பது இங்கு குறிப்பிடதக்கது.

பிரான்ஸ் மருத்துவதுறையில் புலம்பெயர் ஈழத்தமிழ் மகன் சாதனை! Reviewed by Vijithan on March 13, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.