உள்ளூராட்சி தேர்தலில் வேட்பாளர் ஒருவர் செலவிடக்கூடிய அதிகபட்சத் தொகை வர்த்தமானியில் வெளியீடு
>உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வேட்பாளர் ஒருவர் செலவிடக்கூடிய அதிகபட்சத் தொகை வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, வேட்பாளர் ஒருவர் வாக்காளர் ஒருவருக்கு 74 ரூபா முதல் 160 ரூபாவிற்கு இடைப்பட்ட தொகையை செலவிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நடைபெற உள்ள 336 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கும் இந்தத் தொகை தனித்தனியாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பில் பூநகரி, மன்னார் மற்றும் தெஹியத்தகண்டிய பிரதேச சபைகளுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் தற்போது நிறைவடைந்துள்ளன.
இன்று நண்பகல் 12:00 மணியுடன் இந்த நடவடிக்கை நிறைவடைந்ததாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
Reviewed by Vijithan
on
March 27, 2025
Rating:


No comments:
Post a Comment