அண்மைய செய்திகள்

recent
-

ஐரோப்பா செல்ல முயன்ற 10 பேர் அதிரடியாக கைது!

  இலங்கைக்குள் நுழைந்த 10 பங்களாதேஷ் பிரஜைகளை திங்கட்கிழமை (24) பகல் கட்டுநாயக்காவின் ஆண்டியம்பலம் பகுதியில் வைத்து குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.


சட்டவிரோதமாக ஐரோப்பாவுக்கு தப்பிச் செல்லும் நோக்கத்துடன் அவர்கள் இலங்கைக்கு வந்ததாக விமான நிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர். இது குறித்து அதிகாரிகள் மேலும் தெரிவிக்கையில்,



 சந்தேக நபர்கள் வெலிசர தடுப்பு மையத்தில்


கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் 20 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வருவதற்கு முன்பு கடந்த பெப்ரவரி மாதம் பங்காதேஷிலிருந்து இந்தியாவுக்கு பயணம் செய்துள்ளனர்.


அங்கிருந்து சுற்றுலா வீசா மூலம் இலங்கைக்குள் நுழைந்து, அனுமதிக்கப்பட்ட காலத்துக்கு அப்பால் தங்கியிருந்துள்ளனர்.



அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்தக் குழுவினர் இலங்கையிலிருந்து டுபாய்க்கு சென்று, பின்னர் எகிப்துக்குள் நுழைந்து, இறுதியில் மத்திய தரைக் கடலைக் கடந்து ஐரோப்பாவை அடைய திட்டமிட்டிருந்தமை தெரிய வந்துள்ளது.


இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்கள் வெலிசர தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.



மேலும் இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ், நாடுகடத்தல் நடவடிக்கைகள் நிறைவேறும் வரை அவர்கள் தடுப்புக் காவலில் இருப்பார்கள் என அதிகாரிகள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.




ஐரோப்பா செல்ல முயன்ற 10 பேர் அதிரடியாக கைது! Reviewed by Vijithan on March 25, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.