அண்மைய செய்திகள்

recent
-

நாட்டில் 90 வீதமான பெண்களுக்கு பொதுப் போக்குவரத்தின் போது பாலியல் துன்புறுத்தல்

நாட்டில் 90 வீதமான பெண்கள் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது பொதுப் போக்குவரத்தின் போது பாலியல் துன்புறுத்தலை எதிர்கொள்வதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.


பாலின சமத்துவமின்மை குறியீட்டின்படி, உலகளாவிய பாலின இடைவெளி குறியீட்டில் 146 நாடுகளில் இலங்கை 122வது இடத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது என்று கூறிய பிரதமர், இது பாலினம், இனம், மதம் மற்றும் வயதை தாண்டிய ஒரு சமூக சவால் என்றும் சுட்டிக்காட்டினார்.


அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயம், ஐ.நா. பெண்கள் அமைப்பு மற்றும் Chrysalis நிறுவனம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த ‘THRIVE- Together for Her: Resilience-building, Inclusivity, and Voices for Equality in Sri Lanka’ திட்டத்தின் உத்தியோகபூர்வ தொடக்க விழாவில் பங்கேற்று கருத்து தெரிவிக்கும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.


இந்த திட்டத்தின் தொடக்க விழா கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயத்தில் நடைபெற்றது.




நாட்டில் 90 வீதமான பெண்களுக்கு பொதுப் போக்குவரத்தின் போது பாலியல் துன்புறுத்தல் Reviewed by Vijithan on March 26, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.