பட்ஜெட்டின் இரண்டாவது வாசிப்பு முடிந்த போதும் சொல்லப்பட்ட வாக்குறுதி எங்கே?மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் தாதிய உத்தியோகத்தர்கள் போராட்டம்.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் தாதிய உத்தியோகத்தர்கள் இன்றைய தினம் திங்கட்கிழமை(17) மதியம் ஒரு மணி நேர அடையாள பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
தங்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தில் மேலதிக நேர கொடுப்பனவு மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவு களை உரிய முறையில் வழங்க கோரியும், 5 வருடங்களுக்கு ஒரு முறை வழங்கப்படும் பதவி உயர்வை 10 வருடங்களுக்கு ஒரு முறை மாற்றியுள்ளனர்.
இதனை கண்டித்தும் இன்றைய தினம் திங்கட்கிழமை(17) நாடளாவிய ரீதியில் அரச வைத்தியசாலைகளின் தாதியர்கள் கவனயீர்ப்பு போராட்டம் இன்றை முன்னெடுத்தனர்.
அதற்கு அமைவாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் தாதிய உத்தியோகத்தர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட தாதிய உத்தியோகத்தர்கள் பல்வேறு வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பட்ஜெட்டின் இரண்டாவது வாசிப்பு முடிந்த போதும் சொல்லப்பட்ட வாக்குறுதி எங்கே? என கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
வைத்தியசாலைக்கு வரும் நோயளர்கள் பாதிக்கப்படாத வகையில் அமைதியான முறையில் மதியம் 12 மணி முதல் 1 மணி வரை தமது கோரிக்கைகளை முன் வைத்து தாதிய உத்தியோகத்தர்கள் போராட்டத்தை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.
Reviewed by Vijithan
on
March 17, 2025
Rating:


.jpeg)
.jpeg)


No comments:
Post a Comment