சம்மாந்துறையில் இரு அரசியல் கட்சிகளுக்கிடையில் மோதல்!
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியான நாய்குட்டியர் சந்தி பகுதியில் ஏற்பட்ட மோதல் ஒன்றில் பலர் காயமடைந்த நிலையில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று (14) திங்கட்கிழமை இரவு குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் களம் இறங்கியுள்ள, தேசிய காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆதரவாளர்களிடையே இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் தற்போது சூடுபிடித்துள்ள நிலையில் இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், அம்பாறை மாவட்டத்தில் முதலாவது தேர்தல் வன்முறை சம்பவமாக இது பதிவாகியுள்ளதாக எமது நிருபர் தெரிவிக்கின்றார்.
சம்மாந்துறையில் இரு அரசியல் கட்சிகளுக்கிடையில் மோதல்!
Reviewed by Vijithan
on
April 15, 2025
Rating:

No comments:
Post a Comment