வானிலை குறித்து சிவப்பு எச்சரிக்கை
பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு குறித்து சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு, வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்த முன்னெச்சரிக்கை நிலையத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு நாளை (11) பிற்பகல் 2:30 மணி வரை செல்லுபடியாகும் என அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.
சிலாபத்தில் இருந்து புத்தளம், மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலும், காலி முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பகுதிகள் தொடர்பில் அவதானத்துடன் இருக்குமாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவநிலையின் தாக்கம் காரணமாக, சிலாபத்தில் இருந்து புத்தளம், மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலும், காலி முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பகுதிகளில் காற்றின் வேகமானது, அவ்வப்போது மணிக்கு 60-70 கி.மீ. வரை அதிகரிக்கக்கூடும், என்பதுடன் அந்த கடல் பகுதிகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாக காணப்படக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கடல் பகுதிகளுக்கு மறு அறிவிப்பு வரும் வரை பயணம் செய்ய வேண்டாம் என கடற்சார் மற்றும் மீனவ சமூகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், இது தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்படும் அடுத்தடுத்த அறிவிப்புகளை கவனமாக பின்பற்றுமாறு மீனவ மற்றும் கடற்சார் சமூகங்களுக்கு மேலும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வானிலை குறித்து சிவப்பு எச்சரிக்கை
Reviewed by Vijithan
on
June 10, 2025
Rating:
Reviewed by Vijithan
on
June 10, 2025
Rating:


No comments:
Post a Comment