25,000 இற்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 25,000 இற்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
மழையுடனான வானிலை மீண்டும் அதிகரிக்க கூடும் என அறிவுக்கப்பட்டுள்ள நிலையில் டெங்கு நோய் குறித்து சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேல் மாகாணத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சல் காரணமாக 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதிகளவில் நுளம்பு பெருகும் இடங்கள் தொடர்பில் கவனம் செலுத்துமாறும் தங்களை பாதுகாத்துக்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் சுகாதார அதிகாரிகள் பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
வீடுகள் மற்றும் பொது இடங்களில் தேங்கி நிற்கும் நீரே டெங்கு பெருகுவதற்கு முதன்மை காரணியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை,இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் உள்ளவர்கள், உடல் வலி, மூட்டு வலி, கடுமையான தலைவலி, மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகள் காணப்படுபவர்கள் உடனடியாக வைத்தியசாலைக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Reviewed by Vijithan
on
June 09, 2025
Rating:


No comments:
Post a Comment