அண்மைய செய்திகள்

recent
-

நகை கொள்ளையில் ஈடுபட்ட இருவரை துரத்தி பிடித்து பாடம் புகட்டிய பொதுமக்கள்!

 மோட்டார் சைக்கிளில் வீதியால் சென்ற பெண்னை வழிமறித்து தங்க சங்கிலியை பறிமுதல் செய்த கொள்ளையர்கள் இருவர் ஊர் மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட சம்பவம் நேற்று (15) இடம்பெற்றுள்ளது. 


முல்லைத்தீவு - முள்ளியவளை பொன்னகர் கிராமத்தில் உள்ள வளர்மதி மைதானத்திற்கு அருகாமை இரவு 7 மணியளவில் வீதியால் பயணித்தபோது, இனந்தெரியாத கொள்ளையர்கள் இருவர் குறித்த பெண்ணை வழிமறித்து கழுத்தில் கத்தியினை வைத்து மிரட்டி கழுத்தில் அணிந்திருந்த நான்கரை பவுண் தங்க சங்கலியை நேற்றிரவு பறித்துக் கொண்டு தப்பிச் சென்றிருந்தனர். 

குறித்த சம்பவம் தொடர்பில் உடனடியாக கிராம மக்களுக்கு தெரியப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, ஊர்மக்கள் இணைந்து கொள்ளையர்கள் இருவரையும் மடக்கிப்பிடித்து முள்ளியவளை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். 

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முள்ளியவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

குறித்த சம்பவத்தில் 32, 22 வயதுடைய தர்மபுரம் விசுவமடு பகுதியினை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.



நகை கொள்ளையில் ஈடுபட்ட இருவரை துரத்தி பிடித்து பாடம் புகட்டிய பொதுமக்கள்! Reviewed by Vijithan on July 16, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.