அண்மைய செய்திகள்

recent
-

யாழில் 35 ஆண்டுகளின் பின் கோலாகலமாக இடம்பெற்ற ஆலய தேர்

 யாழ்ப்பாணம் - மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி அம்பாள் ஆலய தேர் திருவிழா 35 ஆண்டுகளின் பின்னர் நேற்று முன்தினம் (9) இடம்பெற்றது.


வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி அம்பாள் புதிய சித்திர தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தார்.



உயர்பாதுகாப்பு வலயம்

கண்ணகி அம்மன் ஆலய வருடாந்திர அலங்கார உற்சவம் கடந்த 26ம் திகதி ஆரம்பமாகி தொடர்ந்து உற்சவங்கள் நடைபெற்று 14ஆம் திருவிழாவான தேர்த்திருவிழா நேற்று முன்தினம் இடம்பெற்றது.



கடந்த 1990ஆம் ஆண்டு யுத்தம் காரணமாக மயிலிட்டி பகுதி மக்கள் தமது சொந்த இடங்களில் இருந்து இடம்பெயர்ந்தனர்.




அதனை தொடர்ந்து அப்பகுதி உயர்பாதுகாப்பு வலயமாக இராணுவத்தினரால் பிரகடனப்படுத்தப்பட்டது. அக் கால பகுதியில் இராணுவ கட்டுப்பாட்டிற்குள் இருந்து ஆலயம் சேதமடைந்ததுடன், ஆலயத்தின் சித்திர தேரும் முற்றாக அழிக்கப்பட்டது.



இந்நிலையில் யுத்தம் நிறைவடைந்த பின்னர் பல்வேறு மக்கள் போராட்டங்களை தொடர்ந்து மயிலிட்டி பகுதியில் மக்கள் மீள் குடியேற அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து, ஆலயத்தை மக்கள் தமது நிதி பங்களிப்பில் புனரமைத்தனர்.




அதனை அடுத்து, மக்களின் நிதி பங்களிப்பில் ஆலயத்திற்காக சித்திர தேர் உருவாக்கப்பட்டு, கடந்த 07ஆம் திகதி சித்திர தேர் வெள்ளோட்டம் இடம்பெற்றது.


தொடர்பில் , நேற்று முன்தினம் கண்ணகி அம்பாள் புதிய சித்திர தேரில் ஆரோகணித்து வந்த நிலையில் பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனி அருளை பெற்றனர்.




யாழில் 35 ஆண்டுகளின் பின் கோலாகலமாக இடம்பெற்ற ஆலய தேர் Reviewed by Vijithan on July 11, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.