அண்மைய செய்திகள்

recent
-

முதல் முறையாக இணையவழி ஏலத்தில் ரூ.1.7 கோடிக்கு விற்பனையான மகாத்மா காந்தி ஓவியம்

 மகாத்மா காந்தியின் ஓவியம் போன்ஹாம்ஸில் நடந்த ஆன்லைன் ஏலத்தில் காந்தி ஓவியம் ரூ.1.7 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மகாத்மா காந்தி கடந்த 1931-ஆம் ஆண்டு 2-வது வட்டமேசை மாநாட்டில் கலந்து கொள்ள இங்கிலாந்தின் லண்டனுக்குச் சென்ற போது அவரை பிரிட்டிஷ் கலைஞர் கிளேர் லெய்டன் சந்தித்தார்.




அப்போது அவர் ஓவியம் வரைவதற்காக காந்தி போஸ் கொடுத்தார்.



இந்த ஓவியம் 1974 -ஆம் ஆண்டு பொதுக் காட்சிக்கு வைக்கப்பட்டது.


இந்த நிலையில் மகாத்மா காந்தியின் ஓவியம் ஏலம் விடப்பட்டது. போன்ஹாம்ஸில் நடந்த ஆன்லைன் ஏலத்தில் காந்தி ஓவியம் ரூ.1.7 கோடிக்கு விற்பனை ஆனது.


நிர்ணயிக்கப்பட்ட விலையை காட்டிலும் 3 மடங்கிற்கு விற்பனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மகாத்மா காந்தி தன் வாழ்நாளில் ஓவியருக்கு போஸ் கொடுத்தது இந்த நிகழ்வு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.





முதல் முறையாக இணையவழி ஏலத்தில் ரூ.1.7 கோடிக்கு விற்பனையான மகாத்மா காந்தி ஓவியம் Reviewed by Vijithan on July 16, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.