அண்மைய செய்திகள்

recent
-

இலங்கை வரலாற்றில் முதல் முறை ; இஸ்லாமிய பெண்ணுக்கு முக்கிய பதவி

 இலங்கை அஞ்சல் திணைக்களத்தின் உள்ளக கணக்காய்வு உதவி அத்தியட்சகர் பதவிக்கு பாத்திமா ஹஸ்னா நியமிக்கப்பட்டுள்ளார்.


இந்நிலையில் இலங்கை வரலாற்றில் இந்த பதவிக்கு நியமிக்கப்படும் முதலாவது முஸ்லிம் பெண் என்ற வரலாற்று சிறப்பையும் அவர் பெற்றுள்ளார்.


மட்டக்களப்பு – ஏறாவூரைச் சேர்ந்த ஹஸ்னா, இந்த நியமனத்திற்கு முன்னர் இலங்கை அஞ்சல் பயிற்சி நிறுவனத்தில் பயிற்சிப் போதனாசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.




அஞ்சல் திணைக்களம் கடந்த ஆண்டு நடத்திய உதவி அஞ்சல் அத்தியட்சகர்கள் தேர்வில், அஞ்சல் துறையில் சேவையாற்றிய 39 பேர் சித்தியடைந்திருந்தனர்.


அவர்களுள் 12 பேர் உள்ளக கணக்காய்வு உதவி அத்தியட்சகர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.



இந்த அடிப்படையில், பாத்திமா ஹஸ்னா, தன் திறமை மற்றும் பணிப்பாட்டின் மூலமாக முன்னோடியாக இந்த உயரிய பொறுப்புக்கு நியமிக்கப்படுவதன் மூலம், முஸ்லிம் பெண்களுக்கான ஊக்கத்தையும் வழிகாட்டுதலையும் உருவாக்கியுள்ளார்.


அதேவேளை அஞ்சல் திணைக்கள வரலாற்றில் இதுவரை முஸ்லிம் பெண்ணொருவரும் இந்த பதவியை வகித்ததில்லை என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 




இலங்கை வரலாற்றில் முதல் முறை ; இஸ்லாமிய பெண்ணுக்கு முக்கிய பதவி Reviewed by Vijithan on July 16, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.