பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் - மாந்தை மேற்கு
பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்றையதினம் (16.07.2025) காலை 09.30 மணியளவில் எமது பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் கௌரவ ம.ஜெகதீஸ்வரன் அவர்களது தலைமையில் இடம்பெற்றது.
இதிலே பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ S.திலகநாதன், K.காதர் மஸ்தான், ஆகியோர் கலந்து கொண்டதுடன் அழைக்கப்பட்ட வேறு திணைக்கள தலைவர்கள், அலுவலர்கள், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், சிவில் சமூக பாதுகாப்பு அமைப்புக்கள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் பிரதேச செயலக அலுவலர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இவ் பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் தீர்க்கப்படவேண்டிய பொதுமக்களின் பிரச்சினைகள், மேலும் இதுவரை தீர்க்கப்படாதுள்ள பிரச்சினைகள், மேற்கொள்ளப்பட தேவையான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
வனவள திணைக்களத்தினால் GPS தொழினுட்பத்தின் எல்லையிடப்பட்ட பொதுமக்களின் காணிகள் தொடர்பாகவும், கிராமங்களுக்கு குறிப்பாக பாலைப்பெருமாள்கட்டு கிராம அலுவலர் பிரிவின் குருவில் கிராமம் வரை பொதுப்போக்குவரத்தினை விஸ்தரித்தல், சட்டவிரோத மணல் அகழ்வு, நீர்ப்பாசன திணைக்களத்தினால் எல்லையிடப்பட்ட எல்லைக்கல் சேதப்படுத்தப்பட்டமை தொடர்பான பல பிர்ச்சினைகள் இதன்போது ஆராயப்பட்டது. மன்னார் பல்கலைக்கழகம் அமைத்தலுக்கு நாயாற்றுவெளி பகுதியில் காணி வழங்குதல் தொடர்பாக விசேட கவனம் எடுக்கப்பட்டது.
பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தல் மற்றும் களவாடுதல் போன்ற சட்டவிரோத செயற்பாடுகளில் பொதுமக்கள் ஈடுபட வேண்டாம் அவ்வாறு ஈடுபடுவதால் வரிப்பணமாக நீங்கள் செலுத்தும் உங்களது பணமே வீணடிக்கப்படுகின்றது என் பிரதேச ஒருங்கிணைப்புக்குழுவின் கௌரவ.தலைவர் அவர்கள் அவர் மேலும் தெரிவித்தார்
.jpg)
No comments:
Post a Comment