அண்மைய செய்திகள்

recent
-

மட்டக்களப்பில் 7 பேருக்கு ஒருவர் என்ற ரீதியில் புற்றுநோய்!

 மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏழு பேருக்கு ஒருவர் என்ற ரீதியில் புற்றுநோய் உருவாகி வருகின்றது. இது ஒரு சமுதாய பிரச்சனையாக இருக்கின்றது என வைத்தியரும், புற்றுநோய் தடுப்பு சங்க தலைவரும் மட்டு மாநகர சபை உறுப்பினருமான பேராசிரியர் கருணாகரன் தெரிவித்தார். 


மட்டக்களப்பில் வாய் புற்றுநோயை தடுக்கும் திட்டத்தின் கீழ் பேருந்தின் சாரதிகள் மற்றும் நடத்துனர்களை பரிசோதனை செய்யும் நடமாடும் வைத்திய முகாம் மட்டு பிராந்திய சுகாதர சேவைகள் பணிமனையின் பணிப்பாளர் வைத்தியர் முரளீஸ்வரன் தலைமையில் மட்டு மத்திய பஸ்தரிப்பு நிலையத்தில் இன்று (05) இடம்பெற்றது. 

இதன்போது அங்கு கலந்துகொண்ட வைத்தியர் கருணாகரன் இவ்வாறு தெரிவித்தார், 

மாவட்டத்தில் வாகன சாரதிகள் நடத்துனர்கள் வெற்றிலை, பாக்கு புகையிலை, புகைத்தல் போன்றவற்றிற்கு அடிமையாகியுள்ளனர். 

அவை இல்லாமல் அவர்களது தொழிலை செய்ய முடியாது உள்ளனர். இது எந்தளவுக்கு வாய் புற்றுநோயை கொண்டுவரும் என்பது எங்களுக்கு தெரியும் இது பெரும் சமூதாய பிரச்சனையாக இருக்கின்றது. 

எனவே முதலில் இந்த வாகன சாரதிகள் நடத்துனர்களை முதலில் பரிசோதித்து புற்று நோயை இனம் கண்டு வெற்றிலை, பாக்கு, புகையிலை , புகைத்தல்களை பாவிப்பதால் ஏற்படும் புற்றுநோய் தொடர்பாக அவர்களுக்கு தெளிவூட்டல்களை தெளிவுபடுத்துவதன் மூலம் இதனை தடுக்கமுடியும். 

இந்த வெற்றிலை, பாக்கு புகையிலை, பாவிப்பவர்கள் அதிகரித்துள்ளது. இதனால் அவர்களுக்கு வாய் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளது. இதனால் வாழ்க்கையே கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை ஒவ்வொருவரும் உணர்ந்து செயற்பட வேண்டும் என்றார்.



மட்டக்களப்பில் 7 பேருக்கு ஒருவர் என்ற ரீதியில் புற்றுநோய்! Reviewed by Vijithan on August 05, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.