அண்மைய செய்திகள்

recent
-

மாணிக்கப்பிள்ளையார் ஆலய வளாகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு

 முல்லைத்தீவு  மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விசுவமடு மாணிக்கபிள்ளையார்

ஆலய வளாகத்தில்  உள்ள  மாமரத்தில் நபர் ஒருவர்  தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்


முல்லைத்தீவு  மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விசுவமடு மாணிக்கப் பிள்ளையார்

ஆலய வளாகத்தில்  உள்ள  மாமரத்தில் நபர் ஒருவர்  தூக்கில் தொங்கிய நிலையில் காணப்படுவதனை அவதானித்தவர்களால் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்துக்கு சென்ற   புதுக்குடியிருப்பு பொலிசார் மேலதிக விசாரணை மேற்கொண்டதுடன் 


சடலத்தை முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் அவர்கள் உடலத்தை பார்வையிட்ட பின்னர் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் உடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு  உத்தரவிட்டார்


குரவில் உடையார்கட்டு பகுதியை சேர்ந்த கந்தசாமி தர்சன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டவராவார் இவர் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது என்ன நடந்தது என்பது தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்







மாணிக்கப்பிள்ளையார் ஆலய வளாகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு Reviewed by Vijithan on August 28, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.