மாந்தை கிழக்கு சிறாட்டிக்குளம் சமூக நீர் வழங்கல் திட்டம் மக்களுக்கு கையளிக்கப்பட்டது.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் தேசிய சமூக நீர்வழங்கல் திணைக்களத்தினால் நிர்மாணிக்கப்பட்ட சிறாட்டிக்குளம் சமூக நீர் வழங்கல் திட்டம் இன்றய தினம் மக்களுக்கு கையளிக்கப்பட்டது..இன்று இடம்பெற்ற இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் திரு.அ.உமாமகேஸ்வரன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் தேசிய சமூக நீர்வழங்கல் திணைக்களத்தினால் ரூபா 23 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்டசமூக நீர் வழங்கல் திட்டத்தை மக்களிடம் கையளித்தார்.
இந்நிகழ்வில் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் செல்வி ம.சர்மிலி தேசிய சமூக நீர்வழங்கல் திணைக்களத்தின் பொறுப்பாளர் சிறாட்டிக்குளம் அ.த.க பாடசாலை அதிபர்சிறாட்டிக்குளம் பிரதேச கிராம அலுவலர் மற்றும் பிரதேச மக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment