அண்மைய செய்திகள்

recent
-

பிரபல நடிகர் மதன் பாப் காலமானார்

 பிரபல குணச்சித்திர நடிகர் மதன் பாப் காலமானார் 


சென்னை அடையாறில் உள்ள இல்லத்தில் தனது 71 வயதில் அவர் காலமானதாக தெரிவிக்கப்படுகிறது. 

குணச்சித்திர வேடங்களில் நடித்த நடிகர் மதன் பாப், தனது தனித்துவமான சிரிப்பால், ரசிகர்களை கவர்ந்தவர்.

இசையமைப்பாளராக திரை வாழ்க்கையைத் தொடங்கிய மதன் பாப், பின்னாளில், குணச்சித்திர நடிப்பில் முத்திரைப் பதித்தவர் 

இந்நிலையில் சென்னை அடையாறில் உள்ள இல்லத்தில், உடல் நலக்குறைவால், நடிகர் மதன் பாப் காலமானார். 

மதன் பாப்பின் இயற்பெயர் கிருஷ்ணமூர்த்தி இவருக்கு சுசிலா என்ற மனைவியும், ஜனனி என்ற மகளும், அர்ஷித் என்ற மகனும் உள்ளனர் 

புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த மதன் பாப், அதற்காக சிகிச்சை பெற்று மீண்டதாக கூறப்படும் நிலையில், இன்று மாலை 5 மணியளவில் காலமானதாக தெரிவிக்கப்படுகிறது. 

மதன் பாப்பின் உடல், சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.



பிரபல நடிகர் மதன் பாப் காலமானார் Reviewed by Vijithan on August 02, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.