டிப்பர் வாகனம் ஏறியதில் குடும்பஸ்தர் ஸ்தலத்திலேயே பலி
வவுனியா நெடுங்கேணி துவரங்குளம் பகுதியில் டிப்பர் வாகனம் ஏறியதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
குறித்த சம்பவம் நேற்றைய தினம் (01) இடம்பெற்றுள்ளது.
நேற்று இரவு உயிரிழந்த குடும்பஸ்தர் தனது வீட்டின் முன்பாக உள்ள வீதியில் உறங்கிக்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் அந்த பகுதியால் சென்ற டிப்பர் வாகனம் தவறுதலாக அவர் மீது ஏறியுள்ளது.
இதனால் குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.
சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையே பரிதாபமாக இவ்வாறு உயிரிழந்தார்.
டிப்பர் வாகனத்தை செலுத்திய சாரதி அவரது உறவினர் என தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பாக நெடுங்கேணி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments:
Post a Comment