மன்னாரிலும் தபாலக ஊழியளர்கள் பணி பஸ்கரிப்பு தொடர்சியாக பொது மக்கள் பாதிப்பு
நாடு தழுவிய ரீதியில் தபால் ஊழியர்கள் ஆரம்பித்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் இன்றும்(20) இடம் பெற்று வருகின்ற நிலையில் மன்னார் மாவட்ட தபாலக செயற்பாடுகள் முழுமையாக இடம் பெறவில்லை என்பதுடன் தபாலக சேவைய பெற வந்த பொது மக்களும் பல்வேறு இடைஞ்சலுக்கு உள்ளாகியமையை அவதானக்க கூடியதாக இருந்தது.
19 கோரிக்கைகளை முன்வைத்து கடந்த திங்கட்கிழை (18) மாலை தொடங்கிய வேலைநிறுத்தம் தொடர்ந்து மூன்றாவதது நாளாக இடம் பெற்றுவரும் நிலையில் தொடர்சியாக மக்கள் பல்வேறு அசெளகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
குறிப்பாக தண்டப்பணம் செலுத்துதல்,கொடுப்பனவுகள் பெறுதல்,நீர் மின்சார கட்டணம் செலுத்துதல்,பொதிகள் அனுப்பு சேவைகளை பெற வருகை தந்த பொதுமக்கள் தொடர்சியாக தங்களது சேவையை பெற முடியாத நிலை காணப்படுவதாக பொது மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
Reviewed by Vijithan
on
August 20, 2025
Rating:







No comments:
Post a Comment