கொழும்பில் கோர விபத்து – மாணவர்கள் பலர் படுகாயம்
கொழும்பில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மற்றும் வான் ஒன்று நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 13 மாணவர்கள் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்த மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
10 மாணவர்கள் கொழும்பு சீமாட்டி வைத்தியசாலையிலும், மூவர் தேசிய வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலையில் மாணவிகளை ஏற்றிச் சென்ற வான், பாதுகாப்பு கல்லூரியின் மாணவிகளை ஏற்றிச் சென்ற பேருந்து மோதிக்கொண்டதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்த வானின் சாரதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்
.jpg)
No comments:
Post a Comment