இலங்கைத் தமிழர் சட்டவிரோத குடியேறிகள் அல்ல ; இந்திய அரசு அறிவிப்பு
2015ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் திகதிக்கு முன்னர் உரிய ஆவணங்கள் எதுவுமின்றி இந்தியாவுக்குள் நுழைந்து அரசிடம் அகதிகளாக பதிவு செய்த இலங்கைத் தமிழர்கள் சட்டப்பூர்வமாக தங்குவதற்கு இந்திய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
போர் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையை விட்டு வெளியேறி இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளில் தஞ்சம் புகுந்தவர்களில் பெரும்பான்மையோர் தமிழ் பேசும் இனத்தைச் சேர்ந்தவர்கள்.
இலங்கை தமிழர்கள் தமிழ்நாட்டில் பல்வேறு முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். இலங்கை தமிழர்கள் சுதந்திரமாக இந்தியாவில் வாழ வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த நிலையில், அண்மையில் அமுல்படுத்தப்பட்ட குடிவரவு மற்றும் வெளிநாட்டினர் தொடர்பிலான சட்டத்தின் கீழுள்ள தண்டனை விதிகளிலிருந்தும் இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய அரசு விலக்களித்துள்ளது.
எனவே இலங்கைத் தமிழர்கள் இனி சட்டவிரோத குடியேறிகளாக கருதப்பட மாட்டார்கள் எனவும் இந்திய அரசு கூறியுள்ளது.
இந்திய மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்திய குடிவரவு மற்றும் வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ், உரிய ஆவணங்கள் இல்லாமல் இந்தியாவுக்குள் நுழைந்தவர்களுக்கு தண்டனை விதிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்திய மத்திய அரசின் இந்த முடிவு, மனிதாபிமான அடிப்படையில் எடுக்கப்பட்ட ஒரு முக்கிய நடவடிக்கையாக கருதப்படுகிறது.
இது, இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வாழும் இலங்கை தமிழர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை தமிழர்கள் இனி சட்டவிரோத குடியேறிகள் அல்ல. சமீபத்தில் அமல்படுத்தப்பட்ட குடிவரவு மற்றும் வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ் உள்ள தண்டனை விதிகளில் இருந்தும் இலங்கைத் தமிழர்களுக்கு மத்திய அரசு விலக்கு அளித்துள்ளது.
Reviewed by Vijithan
on
September 04, 2025
Rating:


No comments:
Post a Comment