தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை படைத்த மன்னார் அல்-அஸ்ஹர் ம.வி தேசிய பாடசாலை மாணவர்கள் கௌரவிப்பு.
நடை பெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை படைத்த மன்னார் அல்-அஸ்ஹர் ம.வி தேசிய பாடசாலை மாணவர்கள் 05 பேர் இன்றைய தினம் (4) வியாழக்கிழமை மாலை கௌரவிக்கப்பட்டனர்.
பாடசாலை அதிபர் திருமதி எஸ்.எப்.பஸ்மி தலைமையில் இன்றைய தினம் வியாழக்கிழமை (4) மாலை பாடசாலை மைதானத்தில் ஆரம்ப பிரிவு மாணவர்களின் விளையாட்டுப் போட்டி மற்றும் 2025 ஆம் ஆண்டிற்கான பரிசளிப்பு நிகழ்வு இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் இவ்வருடம் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பதக்கம் அணிவித்து பரிசு வழங்கி கௌரவிக்கப் பட்டனர்.
றிப்கி றிஸாமா-153 புள்ளிகளையும்,ஹிஜாஸ் ஹிபா 137 புள்ளிகளையும், லுக்மான் அஹமட் 136 புள்ளிகளையும், அர்ஷத் கான் ஹயாலீனா-133 புள்ளிகளையும் அபான் ஆசிப் அஹமட்-131 புள்ளிகளையும் பெற்று சித்தி அடைந்த நிலையில் குறித்த 5 மாணவர்களும் கௌரவிக்கப்பட்ட மை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment