மன்னார் ஜோசப் வாஸ் நகர் கிராமத்தில் நடைபெற்ற இலவச சித்த மருத்துவ முகாம்
பேசாலை கிராமிய சித்த மருத்துவமனையின் ஏற்பாட்டில்,வடக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களமும்,யாழ் பல்கலைக்கழக கைதடி சித்த மருத்துவ பீடமும் இணைந்து ஏற்பாடு செய்த இலவச சித்த மருத்துவ முகாம் இன்று செவ்வாய்க்கிழமை (2) காலை மன்னார் ஜோசப் வாஸ் நகர் கிராமத்தில் இடம் பெற்றது.
சித்த மருத்துவத்தின் ஊடாக சுகாதார சுகாதார மேம்பாடு எனும் தொனிப்பொருளில் குறித்த மருத்துவ முகாம் இடம் பெற்றது.
பக்க விளைவுகள் அற்ற மூலிகை மருத்துவத்தின் ஊடாக மக்களுக்கு சேவை முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் குறித்த பிரதேச மக்களின் மருத்துவ தேவையைக் கருத்தில் கொண்டு இலவச சித்த மருத்துவ முகாம் முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது வைத்திய ஆலோசனைகள்,உள நல ஆலோசனைகள்,ஆரம்ப ஆய்வு கூட பரிசோதனைகள், உள்ளிட்ட சேவைகள் முன்னெடுக்கப் பட்டதோடு இலவச மருந்துகள் வழங்கப்பட்டது.
குறித்த மருத்துவ முகாமில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment