மன்னார் மூர்வீதியில் பராமரிப்பு இன்றி காணப்படும் காணிகளினால் சுற்றுப்புற மக்கள் பாதிப்பு.=- மன்னார் நகர சபையின் கவனத்திற்கு
மன்னார் நகர பிரதேச செயலாளர் பிரிவில் மூர்வீதி கிராமத்தில் பல்வேறு வெற்றுக்காணிகள் காணப்படுகின்றது.குறித்த காணிகள் அனைத்தும் மன்னார் நகர சபை பிரிவில் காணப்படுகின்றது.
எனினும் குறித்த வெற்றுக்காணிகளில் சில காணிகள் உரிமையாளர்களால் உரிய முறையில் பராமறிப்பின்றி காணப்படுகின்றது. குறித்த காணிகளில் அடர்ந்த காடுகள் மற்றும் பற்றைகள் காணப்படுகின்ற மையினால் விஷ ஜந்துக்களின் நடமாட்டம் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
காணி உரிமையாளர்கள் உரிய முறையில் பராமரிக்காத காரணத்தால் சில காணிகளில் விஷ ஜந்துக்களின் நடமாட்டம் காணப்படுகிறது.
தற்போது மழைக்காலம் ஆரம்பித்து உள்ளமையினால் நுளம்பின் பெருக்கம் அதிகரிக்கும் என தெரிவித்துள்ளனர்.
எனவே குறித்த பகுதியில் பராமரிப்பின்றி காணப்படும் காணிகளின் உரிமையாளர்களுக்கு எதிராக மன்னார் நகர சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உரிய அதிகாரிகளே இது உங்கள் கவனத்திற்கு.

No comments:
Post a Comment