மாவீரர் நாளை அனுஷ்டிக்க எழுச்சி பெற்ற முல்லைத்தீவு நகரம்
தாயக மண் மீட்பு போரிலே தங்கள் உயிர்களை தியாகம் செய்த மாவீரர்களை போற்றி வணங்கும் மாவீரர் நாளுக்கான முன்னாயத்த பணிகள் தமிழர் தாயகப் பகுதிகள் எங்கும் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது வருகிறது
அந்த வகையில் முல்லைத்தீவு சுற்றுவட்டப் பகுதி உள்ளிட்ட நகர் பகுதி சிவப்பு மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு மாவீரர் பணி நாளை அனுஷ்டிக்க தயராகி வருகின்றது.
தமிழ் மக்களுக்கான உரிமைப் போரில் தமது உயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை போற்றி வணங்கும் மாவீரர் நாள் இவ்வாண்டும் கார்த்திகை 27 ஆம் திகதி தமிழ்மக்களால் உணர்வுபூர்வமாக அனுஸ்ரிக்கப்படவுள்ளது.
அந்தவகையில் இவ்வாண்டும் மாவீரர் நாள் நிகழ்வுகள் மேற்கொள்ள தமிழர் தாயகப் பகுதிகள் மாத்திரமின்றி தமிழ் மக்கள் வாழும் தேசமெங்கும் தயாராகி வருகிறது. அந்தவகையில் முல்லைத்தீவு நகர் பகுதியினை அலங்கரிக்கும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது
Reviewed by Vijithan
on
November 21, 2025
Rating:





No comments:
Post a Comment