வெளிநாட்டில் இருந்து துப்பாக்கியுடன் வந்த இலங்கையர்; அதிகாரிகள் ஷாக்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் விளையாட்டு துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (21) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் வத்தளை எடேரமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவர் பஹரேன் நாட்டிலிருந்து நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இதன்போது விமான நிலைய சுங்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கொண்டு வந்த பயணப்பொதிகளிலிருந்து விளையாட்டு துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
வெளிநாட்டில் இருந்து துப்பாக்கியுடன் வந்த இலங்கையர்; அதிகாரிகள் ஷாக்
Reviewed by Vijithan
on
December 22, 2025
Rating:
Reviewed by Vijithan
on
December 22, 2025
Rating:


No comments:
Post a Comment