77வது இந்திய குடியரசு தின விழா: கொழும்பில் முக்கிய தலைவர்கள் பங்கேற்பு
77வது இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு, இந்திய இல்லத்தில் இன்று (26) இரவு விசேட வரவேற்பு நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ கலந்துகொண்டதுடன், இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா உள்ளிட்ட குழுவினரால் அதிதிகள் வரவேற்கப்பட்டனர்.
விசேட அதிதிகளாக பிரதமர் ஹரினி அமரசூரிய, முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் கலந்துகொண்டனர்.
அத்துடன் சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவர் தொழில்முனைவர் திலித் ஜயவீர உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் மற்றும் அமைச்சர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
இதன்போது இரு நாடுகளின் பெருமைமிக்க வரலாறு குறித்து எழுதப்பட்ட நூல்கள் வழங்கி வைக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து அனைவரும் இரவு விருந்துபசாரத்தில் கலந்துகொண்டனர்.
Reviewed by Vijithan
on
January 27, 2026
Rating:


No comments:
Post a Comment